
ஆவின் நிறுவனத்திற்கு எதிராக சிலர் வடமாநில நிறுவனத்திடம் பணம் பெற்று மக்களிடையே தவறான பரப்புரை செய்கீறார்கள் என்ற என்னுடைய கருத்தில் எள்ளவும் மாற்றம் இல்லை. ஏனெனில் அது ஆதாரத்துடன் உள்ளது. இதற்கு மனோ தங்கராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என அண்ணாமலை கருத்து தெரிவித்திருந்தார்.இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக மன்னிப்பு கேட்க நாங்கள் ஒன்றும் சாவர்க்கர் பரம்பரை அல்ல. நாங்கள் பெரியாரின் பேரன்கள் என கருத்து தெரிவித்துள்ளார்.