தமிழ்நாடு முழுவதும் டெங்கு காய்ச்சலுடன், இன்ஃப்ளூயன்ஸா தொற்று தீவிரமடைந்து வருகிறது. இதனால் குழந்தைகள் முதல் பெரியார்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கிடையில் ஒருசிலர் டெங்குவால் உயிரிழக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. இந்நிலையில்  பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வெளியே செல்லுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.

ஃப்ளூ வைரஸ்கள் நுரையீரலைப் பாதிக்கக் கூடியது என்றும், தொண்டை அலர்ஜி, காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் அரசு மருத்துவமனைகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.