நாக்பூரில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில், தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மற்றும் ரிங்கு சிங் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 238 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது.

பின்னர் 239 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது; அந்த அணியின் பிலிப்ஸ் அதிரடியாக விளையாடி 78 ரன்கள் சேர்த்த போதிலும், மற்ற வீரர்கள் சோபிக்கத் தவறியதால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 190 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இதன் மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.