நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஏ.டி.எம் மகளிர் கல்லூரியில் நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் சார்பாக தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளது. இதில் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் சந்திரன், உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன், பாலன், சீனிவாசன் உட்பட பல கலந்து கொண்டனர். இந்த முகாமிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் எம்எல்ஏக்கள் முகமது ஷா நவாஸ், நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்துள்ளனர். இந்த முகாமில் 90-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டது. இந்நிலையில் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட 2035 பேரில் 669 பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர்.