அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி பூஜையை பலர் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். இந்நிலையில் பெண் தெய்வங்களை ஆராதிக்கும் விழாவான நவராத்திரி வழிபாட்டில், கீழ்க்கண்ட 9 அம்பாள்களை விரதம் அனுஷ்டித்து, தரிசிப்பது கோடி புண்ணியம் அளிக்கும் என்கிறது லலிதோபாக்யானம். 1.உண்ணாமுலை அம்பிகை 2.ஞானப் பிரசுனாம்பிகை 3.காமாட்சி 4.அகிலாண்டேஸ்வரி 5. பர்வதவர்த்தினி 6.மீனாட்சி 7.பகவதி அம்மன் 8.விசாலாட்சி 9.கற்பகாம்பிகை. நவதேவிகளில் ஒருவரையாவது தரிசித்தல் பலன் தரும் என்பது ஐதீகம்.