நாம் நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்த நவராத்திரி பண்டிகை தற்போது வந்துள்ளது. அசைவ பிரியர்கள் இந்த காலப்பகுதியில் அசைவ உணவுகளை சாப்பிட முடியாது. ஏனெனில் நவராத்திரி கொண்டாடப்படும் 10 நாட்களும் வீட்டில் அசைவம் சமைக்க மாட்டார்கள். வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் சைவ உணவுகளை வித்தியாசமான முறையில் செய்து கொடுப்பார்கள்.

இந்த நாட்களில் அம்மனுக்கு சுண்டல் படைக்கலாம். அதோடு இனிப்பு வகைகளில் ஒன்றாக பாயாசத்தை கூட செய்து படைக்கலாம். இந்த பாயாசத்தை சாமை, திணை பச்சரிசியில் வேண்டுமானாலும் செய்யலாம். அந்த வகையில் அனைவரும் விரும்பி சாப்பிடும் அரிசி பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.  அரை கப் பச்சரிசியை எடுத்துக்கொண்டு கழுவி வைக்க வேண்டும். முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை சுத்தம் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து. பின்னர் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் பசுமாலை ஊற்றி கொதிக்க விடவும். பால் கொதித்த  பிறகு அரிசியை இதில் சேர்க்கவும். இரண்டு மூன்று நிமிடங்களுக்கு கலந்து கொண்டே இருக்கவும். நன்றாக வெந்த அரிசியில் நெய், முந்திரி, திராட்சை வறுத்து சேர்க்கவும். இறக்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பாக ஏலக்காய் பொடி கலந்து கிளறி விடவும்.