நவராத்திரியின் மூன்றாம் நாளில் துர்கா தேவியின் திருமண வடிவமான சந்திரகாண்டா தேவியை வழிபட வேண்டும். வீரமும் அழகும் ஒருங்கிணைக்கும் அம்மன் தங்க நிறத்தில் இருக்கின்றார். சந்திர காண்டா மூன்று கண்கள் மற்றும் 10 கரங்களுடன் ஆயுத மற்றும் புலி வாகனத்துடன் காட்சி அளிப்பார். தேவியை தியானிப்பதன் மூலமாக அனைத்து எதிர்மறை ஆற்றல்கள் மற்றும் பிரச்சனைகள் நீங்கும்.

சந்திர கண்டா தேவி இந்து மதத்தில் சுக்கிரனின் அதிபதி. எனவே தேவி பூஜை மூலமாக அனைத்து விதமான சுகங்களும் ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வீட்டில் பணத்திற்கு சிரமம் இருக்காது. குறிப்பாக மல்லிகை பூக்களால் அம்மனை வழிபடுவது சிறப்பானதாகும். சந்திர காண்டா தேவியின் வடிவத்தை தியானிப்பதன் மூலமாக வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து கஷ்டங்களையும் நடுநிலையாக்கும் வலிமையும் தைரியமும் நமக்கு கிடைக்கும்.