அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நவராத்திரி பண்டிகை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பாண்டியகை நாம் கொண்டாடி வருகிறோம். இந்த ஒன்பது நாள் விழாவில் துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்களை பக்தர்கள் வழிபடுவார்கள். இந்த நவராத்திரி பண்டிகையின்போது ஒன்பது நாட்களும் ஒரு சிலர் விரதம் இருந்து தேவியை வழிபடுவது வழக்கம்.

நவராத்திரி பூஜையை பலர் ஒன்பது நாட்கள் விரதமிருந்து தீபம் ஏற்றி வழிபடுகின்றனர். நவராத்திரியின் 9 நாட்கள் அம்மனை பல்வேறு ரூபங்களில் அலங்கரித்து வழிபட வேண்டும். இந்த நிலையில் ஐந்தாம் நாளான இன்று அம்பிகையை வைஷ்ணவி அலங்காரத்தில் அலங்கரித்து வழிபட வேண்டும். அம்பிகைக்கு சிவப்பு நிற புடவை அணிவித்து, நைவேத்தியமாக தயிர்சாதம் செய்து வைத்து வழிபட வேண்டும். பந்துவராளி ராகத்தில் அமைந்த பாடல்களை பாடி வழிபட்டால் சகல விதமான ஐஸ்வர்யமும் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் வீண் விரயங்கள் அகலும்.