இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. அனைத்து வங்கிகளுக்கும் வார இறுதி நாட்கள் விடுமுறை என்பது பொதுவாக உள்ளது. ஆனால் இந்த பண்டிகை தின விடுமுறை மட்டும் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அதன்படி தற்போது நவம்பர் மாதத்திற்கான விடுமுறை பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்கள் என நவம்பர் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 1- புதன்கிழமை -கரக சதுர்த்தி, புதுச்சேரி விடுதலை நாள், ஹரியானா தினம், கர்நாடக ராஜ்யோத்சவா, கேரள பிறவி கரக சதுர்த்தி காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
நவம்பர் 5 -ஞாயிற்றுக்கிழமை
நவம்பர் 10 –  மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
நவம்பர் 11- இரண்டாவது சனிக்கிழமை  அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை
நவம்பர் 12 – தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை

நவம்பர் 13- உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், பீகார், டெல்லியில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
நவம்பர் 14 – செவ்வாய்கிழமை பலிபிரதிபாதா காரணமாக பெரும்பான்மையான மாநிலங்களில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 15- புதன்கிழமை பாய் துஜ் காரணமாக இந்தியா முழுவதும் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 19 – ஞாயிற்றுக்கிழமை விடுமுறை
நவம்பர் 23-  மேகாலயாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை
நவம்பர் 25-  பஞ்சாப், சண்டிகர் மாநிலத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை.
நவம்பர் 30- வியாழன்கிழமை கனக தாச ஜெயந்தி காரணமாக அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை.