தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள பெருமாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல பிக் பாஸ் பிரபலம் ஜி.பி. முத்து. இவர் சில படங்களிலும் நடித்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த எதிர்தரப்பினருக்கும் இடையே கோவில் இடம் தொடர்பாகவும், குடும்பப் பிரச்சினை காரணமாகவும் நீண்ட காலமாக முன்பகை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில் ஜி.பி.முத்துவின் வீட்டின் முன்பாக எதிர்தரப்பினர் கேரளா மாந்திரீக பூஜைகளை நடத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனை ஜி.பி.முத்து மற்றும் அவரது குடும்பத்தினர் தட்டிக்கேட்டபோது, இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, அது திடீரென கைகலப்பாக மாறியது.
#JustNow || யூடியூபர் ஜி.பி.முத்து வீட்டின் முன் மாந்திரீக பூஜை?… தட்டிக்கேட்ட ஜி.பி.முத்து மற்றும் குடும்பத்தினர் மீது தாக்குதல்..#Thoothukudi | #GPMuthu | #YouTuber | #Issue | #PolimerNews pic.twitter.com/CRu7vPsrgc
— Polimer News (@polimernews) July 24, 2026
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் முன்னிலையிலேயே, ஆத்திரமடைந்த இரு தரப்பினரும் நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டனர். இந்த மோதல் தொடர்பான அதிர்ச்சி வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், மோதலில் ஈடுபட்ட ஜி.பி.முத்து தரப்பு மற்றும் எதிர்தரப்பைச் சேர்ந்த மொத்தம் 18 பேர் மீது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
