டெல்லியின் மெஹ்ராலி பகுதியில் மூன்று பெண்களுக்கு நேர்ந்த பாலியல் ரீதியான துன்புறுத்தலைத் தட்டிக்கேட்ட தொழிலதிபர் ஒருவர், ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்களுக்கு ஆதரவாகப் பேசியதற்காக, அங்கிருந்த நபர்கள் அந்தத் தொழிலதிபரைச் சூழ்ந்துகொண்டு சரமாரியாகக் குத்தியும் உதைத்தும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பரவியதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த டெல்லி காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டது.

“>

மேலும் வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் கண்ட காவல்துறையினர், இது தொடர்பாக இதுவரை நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். பெண்களுக்கு எதிரான அத்துமீறலைத் தடுக்க முயன்ற நபர் மீதே இத்தகைய வன்முறை ஏவப்பட்டிருப்பது பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பிடிபட்டவர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.