கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் ஒரு 51 வயது நபர் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு 22 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அந்த 51 வயது நபரின் மாமியார் ஆன 75 வயது மூதாட்டியும் இவர்களுடன் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தன்னுடைய மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் மருமகனுக்கும் பேரனுக்கும் உணவு சமைத்துக் கொண்டு அவர்களை கவனித்துக் கொள்வார்.

இதில் அந்த தொழிலாளிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வீட்டிற்கு மது குடித்துவிட்டு வந்து அறைக்கு தூங்க சென்றார். அந்த மூதாட்டி தனியறையில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் அந்த மூதாட்டியின் அறையில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்ட நிலையில் உடனடியாக பேரன் எழுந்து அங்கு போய் பார்த்தார்.

அப்போது அவருடைய அப்பா மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றது தெரியவந்தது. உடனடியாக வாலிபர் தன் தந்தையை தடுத்து நிறுத்தி அதோடு அவரை சரமாரியாக அடித்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த நிலையில் தொழிலாளியை மீட்டு பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.