சேலம் ஆத்தூரில் வைத்து பிற கட்சிகளை சேர்ந்தவர்கள் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேசிய போது திமுகவுக்கு நல்ல திட்டங்கள் பிடிக்காது. ஆட்சிக்கு வந்ததும் அதிமுகவுடைய அற்புதமான திட்டங்கள் எல்லாம் நிறுத்தப்பட்டு விட்டது.

மினி கிளினிக், குடிமராமத்து, தாலிக்கு தங்கம் போன்ற திட்டங்களை திமுக அரசு தடை செய்துவிட்டது. ஏழைகளுக்கு உதவியாக இருக்கும் எந்த திட்டமும் திமுகவின் தலைவர் ஸ்டாலினுக்கு பிடிப்பதில்லை” எனக் கூறியுள்ளார்.