இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது 75-வது பிறந்தநாளை இன்று (செப்டம்பர் 17) கொண்டாடி வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நாட்டை ஆளும் பிரதமராகவும், பா.ஜனதாவின் முக்கிய தலைவராகவும் விளங்கி வரும் மோடிக்கு, நாடு முழுவதும் பாஜகவினர் சமூக நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு விழாக்களை நடத்தி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது X- தளத்தில், “மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல உடல்நலனும், மகிழ்ச்சியும், நீண்ட ஆயுளும் பெற  வாழ்த்துகிறேன்” எனப் பதிவு செய்து தனது நற்பண்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“>