உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 32 வயதான கோவிந்த் என்ற இளைஞர், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கருப்பு பாம்பு அவரது கையை சுற்றிக் கொண்டதாம். திடீரென விழித்த கோவிந்த், பாம்பு தனது கையை கடிக்கப்போகிறது என்று புரிந்துகொண்டு, துணிச்சலுடன் பாம்பின் தலையை இரு கைகளாலும் இறுக்கமாக அழுத்தி பிடித்துள்ளார்.
பாம்பு தன்னை கடிக்காமல் தடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த கோவிந்த், அதனுடைய வாயை அடைத்துவிட்டு சுமார் அரைமணிநேரம் வரை அதனை விடாமல் பிடித்திருந்தார். அதே நேரத்தில் பயத்தில் அவர் படுக்கையிலிருந்து கீழே விழுந்தாலும், அதில் இருந்து மீண்ட அவர் தொடர்ந்து பாம்பை விடாமல் இறுக பிடித்திருந்தார். பின்னர், அவரை வீட்டினர் அருகிலுள்ள சமூக சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கோவிந்தை பாம்பு கடிக்கவில்லை என்றும், எந்தவிதமான விஷம் உடம்பில் ஏறவில்லை என்றும் உறுதியளித்தனர்.
#FreshAndFast: बिस्तर पर दिखा सांप.. डर के चलते युवक ने मसलकर मार डाला! यूपी के ललितपुर का वीडियो वायरल@SwetaSri27 #MorningPrimeTime #UttarPradesh #Lalitpur pic.twitter.com/hwyaNwMHJp
— Times Now Navbharat (@TNNavbharat) August 19, 2025
“>
இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாம்பைக் தன்னுடைய இரு கைகளால் அழுத்தி உயிர் காத்த கோவிந்தின் துணிச்சலுக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். தற்போது அவர் நலமாக வீடு திரும்பிய நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவ நிபுணர்களை தொடர்புகொள்ள வேண்டும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
