தமிழக முதல்வர் ஸ்டாலின் திருநெல்வேலிக்கு சென்ற போது பிரபலமான இருட்டுக்கடை அல்வாவை சாப்பிட்டார். இதை வைத்து தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் ஸ்டாலினை விமர்சித்து வருகிறார்கள். குறிப்பாக அதிமுகவினர் ஸ்டாலின் அல்வா சாப்பிடும் புகைப்படத்துடன் கவுண்டமணி காமெடியை ஒப்பிட்டு நாட்டில் எவ்வளவோ அமளி நடக்கும்போது இங்க பாருங்க ஒருத்தரை கவலையே இல்லாமல் அல்வா சாப்பிடுகிறார் என்று பதிவிட்டு இருந்தனர். இதற்கு திமுக பதிலடி கொடுக்கும் விதமாக எடப்பாடி பழனிச்சாமி ஒரு ஹோட்டலில் சாப்பிடும் வீடியோவை பகிர்ந்து டேய் மிச்சர் குருப் இங்க என்னடா புளிப்பு காமெடி பண்றீங்க என்று பதிவிட்டு இருந்தனர்.

இதற்கு தற்போது அதிமுக பதிலடி கொடுத்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பதநீர் குடிப்பது போன்று இருக்கிறது. அவர் குடித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்று கூறுகிறார். அப்போ அதில் சர்க்கரை இருக்கிறதா சார் என்று கலாய்த்து அதிமுக பதிவிட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.