பொதுவாக அறுவை சிகிச்சை முடிந்து மயக்கம் தெளிந்தால், பலரும் ஒருவித குழப்பத்தில் இருப்பார்கள். ஆனால் ஸ்டீபன் சேஸ் என்பவருக்கு மட்டும் ஒரு விசித்திரமான விஷயம் நடக்கிறது.
19 வயதில் இவருக்கு கால் முட்டியில் முதல் அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது மயக்கம் தெளிந்து கண் விழித்த ஸ்டீபன், அங்கிருந்த நர்ஸிடம் சரளமாக ஸ்பானிஷ் மொழியில் பேசத் தொடங்கிவிட்டார்.
ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், இயல்பு வாழ்க்கையில் ஸ்டீபனுக்கு ஸ்பானிஷ் மொழியில் சில வார்த்தைகளைத் தவிர வேறு எதுவும் தெரியாது. ஆனால், மயக்க மருந்து (Anesthesia) தெளிந்த அடுத்த ஒரு மணி நேரத்திற்கு மட்டும் அவர் ஒரு பூர்வீக ஸ்பானிஷ் காரரைப் போலப் பேசி அசத்துகிறார்.
நர்ஸ்கள் ஆங்கிலத்தில் கேள்வி கேட்டாலும், அவர் பதில் சொல்வது என்னவோ ஸ்பானிஷ் மொழியில் தான்! சுமார் ஒரு மணி நேரம் கழித்து தான் அவர் மீண்டும் இயல்பாக ஆங்கிலம் பேசத் தொடங்குகிறார். இது போன்ற ஒரு அபூர்வ மருத்துவ நிலையை மருத்துவர்கள் ‘ஃபாரின் லாங்குவேஜ் சின்ட்ரோம்’ (Foreign Language Syndrome) என்று அழைக்கிறார்கள்.
