சீனா இந்திய நாட்டின் எல்லையில் அத்துமீறும் செயல்களில் ஈடுபடுவதை தடுக்க தேவையான காலாட்படை வாகனங்கள், நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை அமெரிக்கா இந்தியாவுடன் இணைந்து தயாரிக்க திட்டமிட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் அமெரிக்க பயணம் மேற்கொண்டிருந்த போது ஜெட் என்ஜின்களை தயாரிக்க தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புத்துறை ஒத்துழைப்பை கொடுக்கும் என உறுதி அளித்ததாகவும் இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறல்களை தடுக்க தேவைப்படும் காலாட்படை வாகனங்கள் நீட்டிக்கப்பட்ட பீரங்கி போன்றவற்றை இந்தியாவுடன் இணைந்த தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் இந்தோ – பசிபிக் பாதுகாப்பு விவரங்களுக்கான உதவி செயலர் எல்லி ராட்டினர் தெரிவித்துள்ளார்.