பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தின் தாஹி கிராமத்தில் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த வியாபாரி  லீலா ராம் என்பவருக்கு ரோஷினி, சாந்தினி, பரமேஷ் குமாரி என மூன்று மகள்கள் இருக்கின்றனர்.

இந்நிலையில் மூன்று பேர் கொண்ட கும்பல் ஒன்று லீலா ராமின் மூன்று மகள்களையும் கடத்திச் சென்று முஸ்லிம் மதத்திற்கு மாற செய்துள்ளனர். அது மட்டும் இல்லாமல் கடத்திச் சென்ற மூன்று இஸ்லாமிய இளைஞர்களே அந்தப் பெண்களை கட்டாய திருமணமும் செய்துள்ளனர். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த போதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.