தோசை என்றாலே பல வகைகளை நாம் சுவைத்திருப்போம். ஆனால், நண்டு மற்றும் லாப்ஸ்டர் வைத்து பேப்பர் தோசை சுட்டு சாப்பிடுவது புது அனுபவமாக இருக்கும்! இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், முழு நண்டை தோசை மாவில் வைத்து, அதற்கு அழுத்தம் கொடுத்து மெல்லிய பேப்பர் தோசையாக சுட்டு எடுக்கின்றனர். அதேபோல், லாப்ஸ்டரையும் மாவில் வைத்து பேப்பர் தோசையாகத் தயாரிக்கின்றனர். இந்த வித்தியாசமான சமையல் முறை பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்துகிறது.
இந்தக் காணொளியில் ஒரு இளைஞர் நண்டு பேப்பர் தோசையை ருசித்து சாப்பிடுவது இடம்பெற்றுள்ளது. இந்த புதுமையான உணவு முயற்சி இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்று, தற்போது வைரலாகி வருகிறது. இப்படி நண்டு மற்றும் லாப்ஸ்டர் போன்ற கடல் உணவுகளைப் பயன்படுத்தி தோசை தயாரிப்பது உணவு ஆர்வலர்களிடையே புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஜப்பான் ஸ்ட்ரீட் புட் வகைகளில் ஒன்றாகும்.
