தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்கவும், நீக்கவும் அண்மையில் சிறப்புத் திருத்தப் பணிகள் (SIR) நடைபெற்றன. இதன் முடிவில், கடந்த 19-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் புதிய பட்டியலின்படி, தகுதியற்ற மற்றும் இடம்பெயர்ந்த சுமார் 97.37 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

​தற்போது, திருத்தப் பணிகளுக்கான படிவத்தைச் சரியாகப் பூர்த்தி செய்யாத சுமார் 10 லட்சம் வாக்காளர்களுக்குத் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பத் தொடங்கியுள்ளது. இந்த நோட்டீஸ் கிடைக்கப் பெறுபவர்கள், தகுந்த ஆவணங்களுடன் நேரில் சென்று விளக்கம் அளிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வாக்காளர் பட்டியலை முழுமையாகச் சீரமைக்கத் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது.