கோடைக்காலம் தொடங்கி மாம்பழங்களின் வரத்து அதிகரித்துள்ள நிலையில், சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பளபளப்பான மாம்பழங்கள் உயிருக்கு ஆபத்தானவை என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. நவி மும்பையில் உள்ள புகழ்பெற்ற சந்தையில், விழிப்புணர்வுள்ள குடிமகன் ஒருவர் நடத்திய ரகசிய ‘ஸ்டிங் ஆபரேஷன்’ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், மாம்பழங்களை விரைவாகப் பழுக்க வைக்கவும், அவை மஞ்சள் நிறத்தில் ஜொலிக்கவும் ‘கால்சியம் கார்பைடு’ (Calcium Carbide) மற்றும் சில தடை செய்யப்பட்ட ரசாயனங்களைச் தொழிலாளர்கள் தெளிப்பது அப்பட்டமாகத் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கால்சியம் கார்பைடு பயன்படுத்தக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தண்ணீருடன் சேரும்போது ‘அசிட்டிலீன்’ என்ற வாயுவை உருவாக்கி, பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கிறது. இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நச்சுக்கள் உள்ளன.

இத்தகைய ரசாயனம் கலந்த மாம்பழங்களை உண்பதால் தலைவலி, தலைசுற்றல், வாந்தி, வயிற்று வலி மற்றும் சுவாசக் கோளாறுகள் ஏற்படக்கூடும். நீண்ட கால அடிப்படையில் இது கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தைப் பாதிப்பதோடு, புற்றுநோய் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது. குறிப்பாகக் குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் முதியவர்களுக்கு இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

View this post on Instagram

 

A post shared by NDTV Marathi (@ndtvmarathi)

ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழம் முழுவதும் ஒரே சீரான மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இயற்கை மாம்பழம் ஆங்காங்கே பச்சை மற்றும் மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். இயற்கையான மாம்பழத்திற்குத் தனித்துவமான இனிப்பு மணம் இருக்கும். ரசாயனம் பயன்படுத்திய பழத்திற்கு மணம் இருக்காது அல்லது மருந்து வாடை வீசும்.

ந்த வீடியோ வைரலானதை அடுத்து, உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரிகள் வாஷி சந்தையில் அதிரடி ஆய்வு நடத்தினர். அங்கிருந்த மாம்பழ மாதிரிகள் சோதனைக்காகச் சேகரிக்கப்பட்டுள்ளன. எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ (FSSAI) விதிகளின்படி இத்தகைய பழங்களை விற்பது கடும் குற்றமாகும். பொதுமக்கள் மாம்பழங்களை வாங்கும் போது மிகவும் கவனமாக இருக்குமாறும், சாப்பிடுவதற்கு முன் நன்கு கழுவிப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.