மாற்றுக் கட்சிகளில் இருந்து முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தவெக-வில் இணைய உள்ளதால், தங்களுக்கு கட்சியில் பதவி கிடைக்குமா என்ற அச்சம் தற்போதைய தொண்டர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த உட்கட்சி சலசலப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசிய அமைச்சர் என்.ஆனந்த், “நம்மாட்கள் யாரும் பயப்பட வேண்டாம்; எப்போதும் யாரையும் கைவிடக் கூடாது என்பதுதான் நமது முதலமைச்சரின் மனசு” எனக்கூறி தொண்டர்களுக்கு அதிரடி தைரியம் அளித்துள்ளார்.
மேலும், புதியவர்களின் வருகையால் பழைய தொண்டர்களின் முக்கியத்துவம் என்றும் குறையாது என்பதை உறுதிப்படுத்திய அவர், விரைவிலேயே வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தவெக தான் தட்டப்போகுது, வெல்லப்போகுது என மாஸ் சவால் விடுத்து தொண்டர்களை செம எனர்ஜியாக்கியுள்ளார்.
