அதிமுகவின் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநிலச் செயலாளராக இருந்த ஆர். கமலக்கண்ணன், தனது ஏராளமான ஆதரவாளர்களுடன் திடீரென த.வெ.க கட்சியில் இணைந்துள்ளார்.

போக்குவரத்து, டாஸ்மாக், மின்துறை உள்ளிட்ட 17 முக்கிய துறைகளில் தவிர்க்க முடியாததாக விளங்கும் அண்ணா தொழிற்சங்கத்தில் சுமார் 5.42 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர்.

இந்த சங்கத்தில் தனிப்பட்ட முறையில் பெரும் செல்வாக்குக் கொண்டவராக விளங்கிய கமலக்கண்ணன் தற்போது த.வெ.க-விற்கு மாறியிருப்பது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.