வீட்டு உபயோகத்திற்கான எல்பிஜி சிலிண்டர் விநியோகம் குறித்து மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 100% சிலிண்டர் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், எந்த விற்பனை மையத்திலும் தட்டுப்பாடு பதிவாகவில்லை என்றும் அரசு தெரிவித்துள்ளது.
அதேபோல், ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்வது 94% அதிகரித்துள்ளது. மேலும், கூடுதல் சலுகையாக 15 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குக் கூடுதல் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யவும் மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
