இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், மாடு பூச்சிகள் (அஃபிட்ஸ்) மற்றும் எறும்புகளுக்கு இடையேயான சுவாரஸ்யமான உறவு குறித்து விளக்கப்பட்டுள்ளது. மாடு பூச்சிகள் தங்களைப் பாதுகாக்க எறும்புகளை நண்பர்களாக வைத்துள்ளன. இதற்கு கைமாறாக, அவை தாவரங்களிலிருந்து சாறு எடுத்து, அதை “தேன் பசை” (ஹனிட்யூ) எனும் இனிப்பு திரவமாக வெளியேற்றி எறும்புகளுக்கு உணவாக அளிக்கின்றன.
இந்த காணொளியில், மாடு பூச்சி தேன் பசையை வெளியிடுவதையும், எறும்புகள் அதை உண்பதையும் தெளிவாகக் காணலாம். இந்த காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் நெட்டிசன்கள் ஆச்சர்யத்துடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
