இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், பீக்காக் மாண்டிஸ் ஷ்ரிம்ப் என்ற வகை இறாலை ஒருபோதும் தொடக் கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த இறால்களுக்கு உலகின் அதிகபட்ச பன்ச் (அடி) வலிமை உள்ளது. அவை ஒரு அடி கொடுக்கும்போது, சிறிய அளவில் சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை (சுமார் 4,700°C அல்லது 8,500°F) ஏற்படுத்துகிறது. இதனால் தண்ணீர் ஆவியாக மாறி, ஷாக் வேவ் உருவாகி உணவை அழிக்கிறது. காணொளியில், இந்த இறால் தனது உணவான இறையை அடித்து சாப்பிடுவதையும், அருகில் கொண்டு சென்ற கண்ணாடி டியூப்பை ஒரே அடியில் உடைப்பதையும் காட்டியுள்ளது.
இந்த இறால்கள் 3 முதல் 6 அங்குலங்கள் (சில இனங்கள் 18 செ.மீ வரை) வளரும், மற்றும் அவற்றின் கண்களுக்கு 16 வகை போட்டோரிசெப்டர்கள் உள்ளன, இதனால் அவை யூவி, பாலரைஸ்டு ஒளி உட்பட பல நிறங்களை காண்கின்றன. இது அவற்றுக்கு உணவு எங்கு ஒளிந்திருந்தாலும் எளிதில் கண்டுபிடித்து, ஸ்மாஷிங் அல்லது ஸ்பியரிங் முறையில் கொன்று சாப்பிட உதவுகிறது.
