இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், வீடுகளில் பயன்படுத்தப்படும் ஆஸ்பெஸ்டாஸ் சீட்டின் ஆபத்துகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. சிலர் வீட்டு கூரைகளுக்கு இந்த சீட்டுகளைப் பயன்படுத்தியிருப்போம், ஆனால் அதை மாற்றும்போது வெளியேறும் நுண்ணிய துகள்களை சுவாசித்தால், அவை நுரையீரலில் தங்கி, நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி புற்றுநோய் வரச் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்த துகள்கள் காற்றில் பரவி, உண்டாகும் ஆபத்து அதிகம் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த சீட்டுகளைத் தவிர்க்க வேண்டும் என்று அந்த காணொளி எச்சரிக்கிறது. எனவே, சீட்டுகளை கையாளும்போது மாஸ்க் அணிந்து, பாதுகாப்புடன் செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.