இலங்கையில் ‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ள நிலையில், இந்தியா மீட்பு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. 600-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து, 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், இலங்கையில் 20,500 ராணுவ வீரர்கள் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டுள்ளனர்.

“>

 

இந்தச் சூழலில், ‘டிட்வா’ புயலால் பாதிக்கப்பட்ட இலங்கையில் ‘ஆபரேஷன் சாகர் பந்து’ என்ற மீட்பு நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளப் பதிவில், சுமார் 12 டன் நிவாரணப் பொருட்கள் (தார்பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்கள்) ஏற்றிச் சென்ற இந்திய விமானப்படையின் C-130 J விமானம் கொழும்பில் தரையிறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.