நடிகர் அஜித்குமாருக்குத் தவெக நிர்வாகியான நிர்மல்குமார் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அஜித் அளித்த பேட்டி ஒன்றை, நடிகர் விஜய்க்கு எதிராக உள்நோக்கத்துடன் கட்டமைக்க சிலர் முயன்றபோது, அத்தகைய முயற்சிகளை விமர்சிக்கும் வகையில் அஜித் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நிர்மல்குமார் பதிலளித்துள்ளார்.
அதில், “தமது பேட்டியை விஜய்க்கு எதிராகக் கட்டமைக்க நினைக்கும் சிலர் அமைதியாக இருப்பது நல்லது” என்று அஜித் கூறியது மிகவும் சரியான மற்றும் பாராட்டத்தக்க கருத்து என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மல்குமார் தனது விளக்கத்தில், “நடிகர் அஜித், விஜய்க்கு ஒரு நல்ல நண்பர் என்பதைத் தமிழகமே அறியும். அவரது நேர்காணலில் இடம்பெற்ற பேச்சுகளை, ஆளுங்கட்சி சார்ந்த சில ஊடகங்கள் வேண்டுமென்றே திரித்து, இரண்டு நடிகர்களுக்கும் இடையே மோதலை உருவாக்க முயன்றன.
ஆனால், அஜித் உடனடியாகத் தலையிட்டு, தனது கருத்துக்குத் தெளிவான விளக்கத்தை அளித்தார். ஆரோக்கியமான நட்பு பாராட்டும் அவரது இந்தக் கண்ணோட்டத்திற்காக, அவருக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று நிர்மல்குமார் கூறியுள்ளார்.
