தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் உடனடியாக வேலூர் சிஎம்சி (CMC) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மருத்துவமனை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். அமைச்சரின் உடல்நிலை குறித்து அவரது ஆதரவாளர்கள் விசாரித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என அவரது ஆதரவாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
