ஹாங்சோவிலிருந்து தென் கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்ட ஏர் சீனா விமானம், பயணத்தின் நடுவே தீ விபத்து ஏற்பட்டதால் ஷாங்காயில் அவசரமாக தரையிறங்கியது.
சனிக்கிழமை நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம், ஏர் சீனா நிறுவனத்தின் CA139 விமானத்தில் நடந்தது. புறப்பட்ட சில நிமிடங்களில், பயணியொருவரின் கேபின் பையில் இருந்த லித்தியம் பேட்டரி திடீரென தீப்பிடித்ததாக நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
மேல்நிலைப் பெட்டியில் ஏற்பட்ட தீயால், கேபினுக்குள் புகை பரவி, பயணிகள் பீதியடைந்தனர். சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளியில், பயணிகள் அலறி உதவி கேட்கும் காட்சிகளும், விமானப் பணியாளர்கள் தீயணைப்புக் கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் தருணங்களும் காணப்படுகின்றன.
విమానం గాల్లో ఉండగా చెలరేగిన మంటలు
హ్యాన్జూ నుంచి సియోల్ వెళ్తుండగా ఎయిర్ చైనా విమానం (CA139)లో ప్రమాదం
ఓ ప్యాసింజర్ క్యాబిన్ బ్యాగులో ఉన్న లిథియం బ్యాటరీ పేలి చెలరేగిన మంటలు
అప్రమత్తమై విమానాన్ని వెంటనే షాంఘైలోని పుడాంగ్ ఎయిర్ పోర్టుకు మళ్లించిన పైలెట్లు pic.twitter.com/XPuZx3wvTD
— Telugu Scribe (@TeluguScribe) October 18, 2025
ஏர் சீனா விமான ஊழியர்கள் மிக வேகமாக செயல்பட்டு சில நிமிடங்களில் தீயை அணைத்ததாகவும், பின்னர் விமானம் பாதுகாப்பாக ஷாங்காய் புடாங் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த விமானம் காலை 9.47 மணிக்கு ஹாங்சோவிலிருந்து புறப்பட்டு, மதியம் 12.20 மணிக்கு தென் கொரியாவின் இஞ்சியோன் சர்வதேச விமான நிலையத்தை அடைய திட்டமிடப்பட்டிருந்தது. சம்பவத்தால் சிறிது தாமதம் ஏற்பட்ட நிலையில், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இலக்கை அடைய ஏர் சீனா உதவி வழங்கியுள்ளது.
மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
