நள்ளிரவு நேரத்தில் பொதுச் சாலை ஒன்றில் ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டு, திடீரெனக் கைகலப்பில் இறங்கிய காட்சிகள் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருவருக்கொருவர் ஆக்ரோஷமாகத் தாக்கிக் கொள்ளும் இந்தச் சம்பவத்தின் போது, அங்கிருந்த ஒரு கும்பல் அதனைத் தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

​இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வரும் நிலையில், நெட்டிசன்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். நடுரோட்டில் அரங்கேறிய இந்த அநாகரீகமான மோதலையும், உதவிக்கு வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கூட்டத்தையும் சாடிப் பலரும் காரசாரமான கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.