சமூக ஊடகங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. அந்த காட்சியில், ஆண் பாம்புடன் இருந்த பெண் பாம்பு திடீரென மற்றொரு பாம்பை அணைத்துக்கொள்வது வெளிப்படையாக தெரிகிறது. இதைப் பார்த்த பலர் அதிர்ச்சி அடைந்ததோடு, சிலரின் கண்களில் கண்ணீரையும் வரவைத்துள்ளது. ஆண் பாம்பின் வலி, பெண் பாம்பின் துரோகம் – இதனை மனிதர்களின் காதல், துரோகக் கதைகளுடன் ஒப்பிடும் வகையில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த வீடியோவை FurqanXpress என்ற பயனர் X- பக்கத்தில் பகிர்ந்துள்ளார். வெறும் 25 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, ஆகஸ்ட் 13 காலை பதிவேற்றப்பட்ட சில மணி நேரங்களிலேயே 71,600 பார்வைகளைப் பெற்றுள்ளது. “துரோகம் செய்வது மனிதர்களுக்கே அல்ல, பாம்புகளும் அதில் வல்லவர்கள்” என்ற வாசகத்துடன் தொடங்கும் இந்தக் கிளிப், பார்வையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்ததோடு இயற்கையிலும் இப்படிப்பட்ட நடப்புகள் உள்ளன என்பதை உணர்த்துகிறது.
धोका देने की आदत सिर्फ इंसानों में नहीं साँप भी इसमें माहिर हैं pic.twitter.com/GSQUocOgzk
— Furqan Khan (@FurqanXpress) August 13, 2025
“>
இயற்கை வாழ்விலும் காதல், துரோகம், சதி என பல உணர்ச்சிகள் கலந்துள்ளன என்பதை வெளிப்படுத்தும் இந்த காட்சி, தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. “மனிதர்களை விட பாம்புகளும் துரோகத்தில் பின்தங்கவில்லை” என்று சிலர் கிண்டல் செய்துள்ளனர். விலங்குகளின் நடத்தை, மனித உணர்வுகளோடு கலந்த இந்த அதிர்ச்சி காட்சி, சமூகவலைதளம் முழுவதும் வைரலாகி வருகிறது.
