கர்நாடக மாநிலத்தில் உள்ள சிமோகா மாவட்டத்தில் போக்குவரத்து பிரிவில் காவலராக பிரபுராஜ் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் ஒரு கல்லூரி அருகே சம்பவ நாளில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது சொகுசு கார் ஒன்று அவ்வழியாக வந்தது. அந்த கார் போக்குவரத்து விதிகளை மீறி பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்ததால் பிரபு ராஜ் காரை தடுத்து நிறுத்தினார். ஆனால் அந்த வாகன ஓட்டி ‌ காரை நிறுத்தாமல் பிரபுராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் திடீரென அந்த வாகன ஓட்டி வேகமாக காரை எடுத்த நிலையில் கார் பேனட்டின் மீது போலீஸ்காரர் விழுந்தார். இருப்பினும் அதனை பெரிது படுத்தாமல் வாகன ஓட்டை காரை எடுத்துக் கொண்டு சென்றார்.

அவர் கார் பேனட்டில் தொங்கியபடி ‌ இறந்த நிலையில் 100மீ  தூரம் கழித்து எப்படியோ பத்திரமாக அதிலிருந்து குதித்து உயிர் தப்பினார். அந்த வாகன ஓட்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் ‌ இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்வதில் காரை ஓட்டி வந்தவர் பெயர் மிதுன் ஜக்டேல் என்பது தெரியவந்தது. மேலும் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் தற்போது அவரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள்.