நெல்லையிலிருந்து கோவில்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்த முதியவர் ஒருவர் நேற்று மாலை சாலையில் வாகன விபத்தில் சிக்கியுள்ளார். இந்த விபத்தில், அவர் ரத்தம் சிந்தி சாலையோரம் தவித்துக் கொண்டிருந்தார். அச்சமயம், அந்த வழியாக காரில் வந்த தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், உடனே காரை நிறுத்தி, தனது பாதுகாப்பு அணியுடன் கீழே இறங்கி, சம்பவ இடத்துக்கு விரைந்தார்.

முதியவரின் நிலையை பார்த்த நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி அடைந்து, அவருக்கு உடனடியாக முதலுதவி அளித்தார். பின்னர் தனது காரில் வைத்திருந்த மருந்துகளைக் கொண்டு முதல்உதவி சிகிச்சை செய்து, அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கார் மூலமாக அனுப்பி வைத்தார். இந்த நெகிழ்வூட்டும் காட்சி அருகில் இருந்தவர்கள் எடுத்த  வீடியோவால் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது .

“>

 

இந்த சம்பவம், மனிதநேயமும், சமூகக் கடமையையும் மீட்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது என பலரும் பாராட்டுகின்றனர். விபத்தில் சிக்கிய முதியவர் தற்போது சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இருக்கிறார் என மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிகழ்வு, நயினார் நாகேந்திரனின் சமூக அக்கறையை வெளிப்படுத்துகிறது என அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.