மும்பையில் நடந்த அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவில், ஒரு வயதான ஆட்டோ ஓட்டுநர், பள்ளி அல்லது கல்லூரி மாணவனாகக் கருதப்படும் இளைஞரை கட்டணம் குறித்த தகராறில் திட்டி, நேரில் தாக்குவதும் காணப்படுகிறது. 16 வினாடிகள் கொண்ட அந்த வீடியோவில், ரிக்ஷா ஓட்டுநர் மாணவனின் காலரைப் பிடித்து, முகத்தில் பலமுறை அறைவதையும், மாணவன் மன்னிப்புக் கேட்டும், மண்டியிட்டு வேண்டியும் அவர் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கிறார்.
सदरच्या शाळकरी मुलाचे पैसे हरवल्यामुळे रिक्षा प्रवासाचे पैसे न दिल्यामुळे रिक्षा चालक थेरड्याने विद्यार्थी पैसे नाहीत माफ करा म्हणत असताना देखील मारहाण केल्याचे दिसते
आमची महाराष्ट्र पोलिसांना विनंती आहे
याला असा धडा शिकवा की या वयात ही याला याचा बाप आणि याचे आजोबा आठवले… pic.twitter.com/bm5PpWs5pj— दत्ता चौधरी (@DattaChoud73764) August 24, 2025
“>
இந்த சம்பவம் நடைபெற்றபோது, அருகில் நிறைந்திருந்த பொதுமக்களோ, ரிக்ஷாவில் அமர்ந்திருந்த மற்ற பயணியோ தலையிட்டு தடுக்காதது நெட்டிசன்களில் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபரும் மாணவனுக்கு எந்த உதவியும் செய்யாமல் இருந்தது குற்றச்சாட்டுகளாக வலுத்து வருகிறது.
தற்போது மும்பை காவல்துறையினர், இந்த வீடியோவை உறுதிப்படுத்தி, சம்பவம் நடந்த இடம் குறித்து மக்களிடம் தகவல் கேட்டு, தாக்கிய ஆட்டோ ஓட்டுநரை பிடிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
