போலந்து நாட்டின் ராடோம் நகரத்தில் நடைபெறவிருந்த விமானக் காட்சிக்கான ரிஹர்ஸலின் போது, F-16 Fighting Falcon போர் விமானம் திடீரென ரன்வே மீது விழுந்து தீப்பற்றி எரிந்த பரிதாபமான சம்பவம் வியாழகிழமை மாலை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமானத்தை இயக்கிய மேஜர் பைலட் மெசியெஜ் ‘ஸ்லாப்’ கிராகோவியன் உயிரிழந்தார். இவர் போலந்தின் புகழ்பெற்ற Tiger Demo Team விமானக் காட்சி குழுவைச் சேர்ந்தவர் என்பதுடன், நாட்டின் மிக அனுபவம் வாய்ந்த பைலட்களில் ஒருவர் ஆவார். சம்பவத்தை தொடர்ந்து, வார இறுதியில் நடைபெறவிருந்த Radom Airshow அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
BREAKING: A Polish F-16 Tiger Demo jet crashed during preparations for the Radom Air Show 2025 — scheduled for August 30–31 in Poland pic.twitter.com/rAWaa4m4f7
— American Press 🗽 (@americanspress) August 28, 2025
“>
இந்த விபத்துக்கான வீடியோ சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. விமானம் தீப்பற்றிச் சிதறி விழும் காட்சிகள் பதிவு செய்யப்பட்டு பலர் அதிர்ச்சியடைந்துள்ளனர். பாதுகாப்புத்துறை அமைச்சர் வ்ளாடிஸ்லாவ் கொசினியாக்-கம்யஷ், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று வீரருக்கு மரியாதை செலுத்தி, “நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த வீரரின் சேவையை நாம் என்றும் நினைவுகூர்வோம்” என X பக்கத்தில் பதிவிட்டார்.
இது போலந்து விமானப்படைக்கும் மிகப்பெரிய இழப்பாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த இடத்தில் தரையில் யாரும் காயமடையவில்லை என போலந்து ராணுவம் தெரிவித்துள்ளது.
