தாய்லாந்து பள்ளி ஒன்றில் நடந்த நகைச்சுவையான தருணம், சமூக வலைதளங்களில் பயனர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி உள்ளது. ஒரு மாணவர், தேசிய கீதம் ஒலிக்கும்போது நடையில் ஒரு காலை உயர்த்தியபடி, சிலை போல உறைந்து நின்ற காட்சி அனைவரையும் கவர்ந்தது.

தாய்லாந்தில், ஒவ்வொரு காலை 8 மணிக்கு தேசிய கீதம் ஒலிக்கும்போது, மாணவர்களும் பொதுமக்களும் மரியாதையுடன் நின்று கவனம் செலுத்துவது வழக்கம். ஆனால், இந்த மாணவர், நடந்து கொண்டிருந்தபோது கீதம் ஒலித்தவுடன், ஒரு காலை உயர்த்திய நிலையில் நிறுத்தி, அப்படியே உறைந்து நின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by The Smart Local Thailand (@thesmartlocalth)

இந்த வீடியோ, டிக்டாக் பயனர் இங்டுவான் என்பவரால் முதலில் பகிரப்பட்டது. முதலில் இது ஒரு புகைப்படம் போல தோன்றினாலும், பின்னணியில் மற்ற மாணவர்களும் ஆசிரியர்களும் நடப்பது தெரிந்தவுடன், இதன் நகைச்சுவை உலகம் முழுவதும் பரவியது. ஒரு பயனர், “தாய் மக்களின் நாட்டுப்பற்றை பாராட்டுகிறேன், அழகான நாடு, அற்புதமான மக்கள்!” என புகழ்ந்தார்.

மற்றொருவர், “இப்போ யார் வகுப்புக்கு தாமதமாக வந்தவர் என தெரிகிறது,” என நகைச்சுவையாக கூறினார். “இந்த பையன், தேசிய கீதத்தில் நில் என்பதை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொண்டார்,” என மற்றொருவர் கிண்டலடித்தார். “ஸ்குவிட் கேமை நிஜத்தில் வென்றுவிட்டார்,” “இந்திய அரசியல்வாதிகள் இந்த சிறுவனிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்,” என பலரும் வேடிக்கையாக கருத்து தெரிவித்தனர்.