டி20 சர்வதேச கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே மூன்று முறை விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த நேபாள வீரர் கரண் கே.சி, தற்போது ஒரு சர்ச்சைக்குரிய சமூக ஊடகப் பதிவால் சிக்கலில் சிக்கியுள்ளார். ஒரு போட்டியின் போது, “வீரர் ஒருவர் தவறுதலாக நடுவர் மீது பந்தை எறிந்தால் என்ன நடக்கும்?” என அவர் எழுப்பிய கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது நடுவர்களை அவமதிக்கும் செயலாகக் கருதப்பட்டதால், நடுவர்கள் மற்றும் போட்டி அதிகாரிகள் அவசரக் கூட்டத்தைக் கூட்டி நேபாள கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்தனர். இதன் விளைவாக, கரண் கே.சி-க்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், அவரது போட்டி ஊதியத்தில் 100% அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தனது தவறை உணர்ந்த அவர், உடனடியாக அந்தப் பதிவை நீக்கிவிட்டு மன்னிப்புக் கேட்டபோதிலும், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற ஒரு வீரர், மைதானத்தில் நடுவர்களின் பாதுகாப்பு மற்றும் மரியாதை குறித்து இத்தகைய கேள்வியை எழுப்பியது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.