ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் ஜலசந்தியில் ஒரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரானிய புரட்சிகர காவல் படையின் கமாண்டோக்கள், ஹெலிகாப்டர் மூலம் வான்வழியாகக் கயிறு கட்டி இறங்கி, சரக்குக் கப்பலான ஐத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.
இந்தச் சோதனையின் போது ஆயுதம் ஏந்திய வீரர்கள் கப்பலைச் சூழ்ந்துகொள்ளும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தக் கப்பல் இஸ்ரேலிய கோடீஸ்வரருக்குச் சொந்தமான நிறுவனத்துடன் தொடர்புடையது என்பதால், பழிவாங்கும் நடவடிக்கையாக ஈரான் இந்த அதிரடித் தாக்குதலை நடத்தியதாகக் கருதப்படுகிறது.
🚨⚡️La Guardia Revolucionaria Islámica (IRGC) difundió imágenes de sus fuerzas abordando y capturando dos buques de MSC cerca del Estrecho de Ormuz hoy jueves 23 de abril! pic.twitter.com/JJrpousfne
— Nela🇨🇴🇵🇸🇸🇩 (@MoronNela) April 23, 2026
“>
இந்தச் சம்பவம் இந்தியாவிற்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் சிறைபிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் 17 இந்திய மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அந்தக் கப்பல் ஈரானிய கடல் எல்லைக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவர்களை விரைவில் விடுவிக்கவும் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈரான் அரசுடன் தீவிரமான பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருகிறது. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரித்து வரும் இத்தகைய மோதல்கள், சர்வதேச கடல்சார் வர்த்தகத்திற்கும் இந்தியப் பணியாளர்களின் பாதுகாப்பிற்கும் ஒரு மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது.
