இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் வணங்கான். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜூ நடித்து வந்தார். இந்த நிலையில் படபிடிப்பின் போது பாலாவுடன் ஏற்பட்ட அனுபவத்தை அவர் பகிர்ந்திருக்கிறார்.

அதாவது படத்தில் மேளம்  அடித்துக் கொண்டே ஆடுவது போல ஒரு காட்சி படமாக்கப்பட்டபோது அது தனக்கு சரியாக வரவில்லை என்று கூறி இயக்குனர் பாலா என்னை முதுகில் பலமாக அடித்ததாக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க இருந்த சூர்யா விலகிய உடன் தானும் விலகியதாக அவர் கூறியுள்ளார்.