“எந்தக் கட்சி ஆட்சியில் பங்கு தருகிறதோ, அந்தக் கட்சியுடனே கூட்டணி அமைப்போம்” என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய், கூட்டணியில் இணையும் கட்சிகளுக்கு அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்ததை நினைவூட்டிய கிருஷ்ணசாமி, “விஜய் பங்கு அளித்தால், அவருடன் கூட்டணி அமைப்பதை நிச்சயமாக பரிசீலிப்போம்” என தெரிவித்துள்ளார்.

இதனால், தவெக மற்றும் புதிய தமிழகம் இணையும் சாத்தியம் குறித்து அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே விஜய்க்கு ஆதரவளிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவதால், வரவிருக்கும் தேர்தலில் தவெக – புதிய தமிழகம் கூட்டணி உருவாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.