தெலுங்கு திரையுலகின் முன்னணி நட்சத்திரமான ராம் சரண் மற்றும் அவரது மனைவி உபாசனா கொனிடேலா ஜோடி, சினிமாவில் மட்டுமல்லாது வணிக உலகிலும் ஒரு பெரும் சாம்ராஜ்யத்தையே நிர்வகித்து வருகின்றனர்.
ராம் சரணின் தனிப்பட்ட சொத்து மதிப்பு சுமார் ரூ.1,400 கோடி என்றும், ஒரு படத்திற்கு அவர் ரூ.70 முதல் ரூ.100 கோடி வரை சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.
அதேபோல், அப்பல்லோ மருத்துவமனை குழுமத்தின் வாரிசான உபாசனாவின் சொத்து மதிப்பு ரூ.1,300 கோடி வரை இருக்கும் எனத் தெரிகிறது. இவர்களது மொத்த குடும்பச் சொத்து மதிப்பு சுமார் ரூ.2,700 கோடியைத் தாண்டுகிறது.
திரைப்படங்கள் தவிர்த்து, ராம் சரண் சொந்தமாக தயாரிப்பு நிறுவனம், ஹைதராபாத் போலோ கிளப் மற்றும் ஏர்லைன்ஸ் நிறுவனம் என பல துறைகளில் முதலீடு செய்துள்ளார்.
லண்டன் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் பயின்ற உபாசனா, அப்பல்லோ குழுமத்தின் முக்கியப் பொறுப்புகளை கவனிப்பதுடன் ‘அத்தம்மாஸ் கிச்சன்’ என்ற புதிய உணவகத் தொழிலையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.
இவர்களது குடும்பத்தில் சொத்து மற்றும் நிர்வாக ரீதியான மோதல்கள் வராமல் இருக்க, ‘ஃபேமிலி கான்ஸ்டிடியூஷன்’ எனப்படும் எழுதப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றி வருவது பலரையும் வியக்க வைத்துள்ளது.
ஆடம்பர வாழ்வியலுக்குப் பெயர் பெற்ற இந்தத் தம்பதிக்கு ஹைதராபாத், மும்பை மற்றும் பெங்களூருவில் பல கோடி மதிப்பிலான பங்களாக்கள் உள்ளன. இவர்களிடம் ரோல்ஸ் ராய்ஸ், மெர்சிடிஸ் மேபேக் மற்றும் பெராரி போன்ற விலையுயர்ந்த சொகுசு கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
கடந்த 2012-ல் திருமணமான இவர்களுக்கு க்ளின் காரா என்ற மகள் இருக்கும் நிலையில், அண்மையில் இவர்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ள செய்தியும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சினிமா மற்றும் வணிகம் என இரண்டிலும் இந்தத் தம்பதி ஒரு பவர் ஹவுஸாகத் திகழ்கின்றனர்.
