தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகராக இருப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்தின் அம்மா அப்பாவின் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.