2026 மகளிர் ஆசிய கோப்பை தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியில், இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாக்கிஸ்தான் அணியின் கேப்டன் ஃபாத்திமா சனா கான்  முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார்.  ஏற்கனவே இந்திய அணி தனது முந்தைய ஆட்டங்களின் மூலம் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த நிலையில் வெறும் 55 ரன்களுக்கு சுருண்டது. அதன் பிறகு களம் இறங்கிய இந்திய அணி மிரட்டலான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மிக எளிதாக 55 ரன்கள் எட்டி பாகிஸ்தானை ஒயிட் வாஸ் செய்தது. டி20 வரலாற்றில் மிக குறைந்த ரன்களில் தோல்வி அடைந்த மோசமான சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது.

மேலும் முன்னதாக டாஸ் போடும்போது வழக்கமாக கேப்டன்கள் கை குலுக்குவது வழக்கம். ஆனால் பகல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுடன் கைகுலுக்குவதை தவிர்த்துவரும் நிலையில் தற்போது நடைபெற்ற ஆசியக் கோப்பையிலும் இந்திய கேப்டன் பாகிஸ்தான் கேப்டனுக்கு கை கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.