​சென்னை: தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று (நவ. 13) சென்னையில் ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்து நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

இந்த விலை உயர்வினால், 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு சவரன் (8 கிராம்) தங்கம் ரூ.94,400 என்ற புதிய உச்சத்தைத் தொட்டு விற்பனை செய்யப்படுகிறது.

​வெள்ளி விலையும் உச்சம்:

​தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ.9 அதிகரித்து ரூ.182 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விளைவாக, ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.9,000 உயர்ந்து, ரூ.1,82,000 என்ற உச்ச விலைக்கு விற்கப்படுகிறது.

சர்வதேச சந்தையில் முதலீடு அதிகரிப்பு மற்றும் பொருளாதாரக் காரணங்களால் உலோகங்களின் மதிப்பு உயர்ந்துள்ள நிலையில், இந்த திடீர் விலை ஏற்றம் திருமணக் காலத்தை ஒட்டி நகை வாங்கத் திட்டமிட்டிருந்த சாதாரண மக்களைக் கலக்கமடையச் செய்துள்ளது