சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற மருத்துவத் துறை பணி நியமன ஆணை வழங்கும் விழாவில், முதலமைச்சர் விஜய் பங்கேற்று தகுதியுடையவர்களுக்கு ஆணைகளை வழங்கி புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது பணி நியமன ஆணை பெற்ற இளம் மருத்துவர் ஒருவர், முதலமைச்சர் விஜய்யிடம் மிகுந்த அன்போடு, “சார், என் தோள் மேல கை போடுங்க சார்” என்று தனது நீண்ட நாள் ஆசையை நேரில் வெளிப்படுத்தினார்.
டாக்டரின் இந்த எதிர்பாராத கோரிக்கையைக் கேட்ட முதலமைச்சர் விஜய், எந்தவொரு தயக்கமுமோ அல்லது அதிகார பந்தாவோ இன்றி, உடனடியாக புன்னகையோடு அந்த மருத்துவரின் தோள் மீது கை போட்டு நெகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். முதலமைச்சரின் இந்த எளிமையான செயலும், அன்பான அணுகுமுறையும் அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்ததுடன், இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
