தோல்விகள் தான் மிகப்பெரிய பாடத்தை கற்றுக் கொடுக்கும் என்று மும்பை கேப்டன் பாண்டியா தெரிவித்துள்ளார். தொடர் தோல்விகள் குறித்து பேசிய அவர், தோல்விகள் கிடைக்கும் அனுபவத்தை யாராலும் உங்களுக்கு கற்பிக்க முடியாது என்றும் தோனி போன்ற ரோல் மாடலாலும் கூட கற்றுத் தர முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் தோல்விகளால் தான் உங்களுடைய வேலை என்ன என்பதை தெரிந்து கொள்ள முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.