
கென்யாவில் காலின்ஸ் ஜூமைசி கலுஷா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 33 வயது ஆகும் நிலையில் கடந்த திங்கள் கிழமை காலின்சை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அதாவது இவர் மனைவி உட்பட 42 பெண்களை குப்பை குடங்கில் கொன்று புதைத்துள்ளார். இவரை மனித உயிருக்கு மதிப்பில்லாத மனநோய் கொலையாளி என்று அழைக்கிறார்கள். இவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் முதலில் தன்னுடைய மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைத்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து 41 பெண்களை கொன்று குப்பை கிடங்கில் புதைத்துள்ளார்.
இந்த கொலைகள் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து கடந்த வியாழக்கிழமை வரை நடந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இவருடைய வீட்டிலிருந்து 10 செல்போன்கள், மடிக்கணினிகள், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி, உடலை அப்புறப்படுத்த பயன்படுத்த சாக்கு பைகள், பெண்களின் ஆடைகள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இவர் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட 42 பெண்களை கொலை செய்துள்ள நிலையில் அனைவரும் ஒரே மாதிரியாக கொல்லப்பட்டுள்ளனர். இவர் கொன்று புதைத்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ள நிலையில் இதுவரை 16 பேரில் உடல்கள் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் கொலைக்கான காரணம் குறித்து தொடர்ந்து காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.